Sunday, October 11, 2009

R A C பயணச் சீட்டு

கணினியின் திரையில் தன்னுடைய ரயில் பயணத்தின் முன்படிவு செய்யப்பட்ட டிச்கெட் ஐ பார்த்துக் கொண்டிருந்தான் ராம்.

அவனுடைய மனதில் சிறு வருத்தம். இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியில் அவன் படிவு செய்து இருந்தாலும், அவனுக்கு படுக்கை வசதி கிடைக்க வில்லை. மாறாக உட்கார்ந்து பயணம் செய்யும் வசதி தான் கிடைத்தது.

நாளை காலையில் அலுவலகம் செல்ல வேண்டும். வேறு வழியின்றி சிறு செய்தித்தாள் எடுத்து வைத்துக்கொண்டான். அதை தரையில் போட்டு விறிப்பு விரித்து தூங்கிக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்.

ரயில் வேகம் கொண்டு கிளம்பி விட்டது. தூக்கம் வராததால் தான் வைத்திருந்த புத்தகத்தில் மூழ்கி போனான்.

சிறிது நேரம் கழித்து டிச்கெட் பரிசோதகர் வந்தார்.

டிச்கெட் கொடுங்க, பரிசோதகர்.

சார்... , நீட்டினான் ராம்.

அவனுக்கான இருக்கை எண்ணை குறித்து கொடுத்து சென்று விட்டார்.

அப்போது அருகில் சுமார் 40 வயது பெண்மணி இருக்கை இல்லாமல் நின்று கொண்டு பயனிப்பதை கவனித்தான்.

நமக்கு தான் உட்கார வசதி இருக்கிறதே, பாவம் அந்த பெண்மணி என்று, தான் கொண்டு வந்த செய்தித்தாளை கொடுத்து அதை தரையில் விரித்து அமர்ந்து கொள்ளுமாறு சொன்னான் ராம்.

நன்றியோடு அவனிடம் பெற்றுக்கொண்டாள் அந்த பெண்மணி.

கண் மூடி உட்கார்ந்திருந்த சிறிது நேரத்தில், மீண்டும் வந்த டிச்கெட் பரிசோதகர் அவனுடய டிச்கெட் கேட்டு வாங்கி பார்த்தார்.

பரிசோதகரை கேள்வி குறியோடு பார்த்துக் கொண்டிருந்தான் ராம்.

”அடுத்த கோச்சில் ஒரு படுக்கை காலியாக உள்ளது. நீங்க அதை எடுத்து கொள்ளுமாறு சொல்லி விட்டு சென்று விட்டார்” டிச்கெட் பரிசோதகர்.

ராமின் அன்றைய பயணம் நல்ல படியாக துவங்கியது.

0 Comments:

Post a Comment