ஒரு காரியம் செய்ய நினைக்கும் நம்மில், யெவ்வளவு பேர் நாமாக யோசித்து செய்கிறோம். முதல்ல நாம செய்றது, அடுத்தவங்க என்ன சொல்லபோறாங்கனு தெரிந்சுக்கறது. அது எத்தகய விஷயமாக இருந்தாலும் சரி.
உதாரணமாக, கல்யாணம், காது குத்தல், தொழில், உத்தியோகம், படிப்பு.... எதற்காக நாம் அடுத்தவங்கள கேட்க நினைக்கிறோம்? நமக்கு அவ்விஷயத்தில் நமக்கு அறிவு குறைவு என்பதாலா இல்லை நம்மால் சுயமாக செயல்படுத்தி சாதிக்க முடியாது என்ற எண்ணத்தாலா? இவை யாவுமே காரணங்கள் அல்ல. எங்கே நாம் ஒரு செயல் செய்து, அதை அடுத்தவர் குறை கூறி விட்டால், விமர்சனம் செய்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் தான் உண்மையான காரணம்.
நாம அப்படி இருந்து கருத்து கேட்க நினைக்கும் “அடுத்தவர்” யார்? உறவா, நட்பா, சொந்தமா, பந்தமா?..... அவர் எப்படிப் பட்டவர், அவரின் குணம் எப்படிப் பட்டது, இவற்றை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஒரு விஷயத்தை ஒருவர் அணுகும் விதம் மூலம், அவரோட எண்ணத்தை, குணத்தை பிரதிபலித்து காட்டி விடும். எல்லாவற்றையும் எல்லோரிடமும் கேட்கக்கூடாது.
நாம் செய்ய நினைக்கும் ஒரு விஷயம், நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும், அதை சிலர் போற்றுவர், சிலர் தூற்றுவர். அடுத்தவங்க சொல் கேட்டு நடக்கும் போது சில சமயம் வெற்றி கிடைக்கும். (அந்த அடுத்தவர் உண்மையிலேயே அவரின் மீது அன்பு, நேசம் கொண்டு சரியான ஆலோசனை தரும் போது). இல்லைனா நம் கதி அதோ கதி தான். எது எவ்வாறு இருந்தாலும், நம் விஷயத்தில், நாம் தான் முடிவு செய்ய வேண்டும். நம்முடைய எண்ணங்கள் செயல்களாக மாறுகின்றன. முறையான முயற்சியும், திடமான நம்பிக்கையும், ஆழமான திட்டமிடலும் தான் நம்ம முன்னோக்கி கொண்டு போகுது.
அவன் கேட்கிறான், இவன் சொல்கிறான், இப்படி செஞ்சா என்ன, அப்படி செஞ்சா என்னனு கேட்குறான்... இப்படிப்பட்டவர்கள் சொல்லை நாம் கேட்பதால் நமக்கு பயன் எதுவும் இல்ல. மாறாக நலவுக்கு பதிலாக கெடுதிதான் அதிகம் வர்ர வாய்ப்பிருக்கு. நாம செய்யும் நலவான காரியங்கள், சுப விஷயங்களில் இத்தகய “அடுத்தவர்களை” ஒடுக்கி, முறையான ஆலோசனை செய்து நாம் செய்யும் போது, எந்த காரியமும் தடையின்றி சுபமாக முடியும்.