Wednesday, April 08, 2009

நிலாவின் குழந்தை பாட்டு....

குழந்தைகளின் நிலாப்பாட்டு எல்லோருக்கும் எல்லோருக்கும் தெரியும்.
நிலாவின் குழந்தை பாட்டு இதோ...

பாப்பா பாப்பா ஓடிவா...
பறந்து பறந்து பாடிவா...
முத்து முத்து பாதங்களால்
எட்டி எட்டி மகிழ்ந்து வா...
கூட்டமாக ஓடிவா...
கும்மாளமிட்டு ஆடி வா..

கண்ணாமூச்சி ஆடலாம்
விழிந்திடாமல் மிதக்கலாம்..
மினுமினுக்கும் நட்சத்திரங்கள்
மத்தாப்பு வாழ்மீன்கள்...
அள்ளி எடுத்து ஆடலாம்
எறீந்து நீயும் ஓடலாம்...

அந்தரத்தில் பறக்கலாம்
தலைகீழாய் நடக்களாம்...
அமெரிக்கா, ஆஸ்டிரேலியா
ஈகுவாட்டர்,ஐரோப்பா...
பூமி மேலாய் சுற்றலாம்
உலக பந்து பாக்கலாம்..

பாப்பா பாப்பா ஓடிவா...
பறந்து பறந்து பாடிவா...
கூட்டமாக ஓடிவா...
கும்மாளமிட்டு ஆடி வா..

2 Comments:

  1. SUMAZLA/சுமஜ்லா said...
    நிலாவின் பாப்பா பாட்டு சூப்பர் கற்பனை. அப்புறம், ப்ளாகரில் போய் செட்டிங்ஸ்ல் anyone என்று போஸ்டிங் ஆப்ஷன் மாற்றிவிடு. கமெண்ட்ஸ் கொடுக்க ஈஸியா இருக்கும்.
    Aravind Thiagarajan said...
    Great, Different thought, Well Expressed :)

Post a Comment