Saturday, October 17, 2009

கவலை

கவலை என்றால் என்ன? கவலை எங்கு பிறக்கிறது? நம்மில் எவ்வளவு பேருக்கு இதற்கு பதில் தெரியும்? ஒருத்தன் மூன்சிய தொங்க போட்டு வர்ரான். என்னடா ஆச்சுனு கேட்டா, நான் கவலைல இருக்கேன்டானு சொல்றான். இங்க கவலைக்கும், மூன்சிய தொங்க போடுறக்கும் என்ன சம்பந்தம்?

(1) ஒரு பிரட்சனைய அதனோட அளவோட நாம் நோக்கும் போது, அல்லது (2) அதன் அலவை விட அதிகமாக நாம நோக்கும் போதோ, அல்லது (3) இல்லாத ஒன்றுக்கு, கற்பனை வடிவம் கொடுத்தோ, இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று இருந்தால், அவனுக்கு அங்க “கவலை” பிறக்குது. முதல் விஷயமாவது சரி, ஏதோனு ஒத்துக்கலாம். ரெண்டாவது விஷ்யம் “மிகைப்படுத்திய” ஒனறு. மூன்றாவதோ, காரணமே இல்லாம நாமாக நம்மள வருத்திகறது.

இதனுடைய தொடர்ச்சி விரைவில்.......

Thursday, October 15, 2009

அடுத்தவர் சொல்

ஒரு காரியம் செய்ய நினைக்கும் நம்மில், யெவ்வளவு பேர் நாமாக யோசித்து செய்கிறோம். முதல்ல நாம செய்றது, அடுத்தவங்க என்ன சொல்லபோறாங்கனு தெரிந்சுக்கறது. அது எத்தகய விஷயமாக இருந்தாலும் சரி.

உதாரணமாக, கல்யாணம், காது குத்தல், தொழில், உத்தியோகம், படிப்பு.... எதற்காக நாம் அடுத்தவங்கள கேட்க நினைக்கிறோம்? நமக்கு அவ்விஷயத்தில் நமக்கு அறிவு குறைவு என்பதாலா இல்லை நம்மால் சுயமாக செயல்படுத்தி சாதிக்க முடியாது என்ற எண்ணத்தாலா? இவை யாவுமே காரணங்கள் அல்ல. எங்கே நாம் ஒரு செயல் செய்து, அதை அடுத்தவர் குறை கூறி விட்டால், விமர்சனம் செய்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் தான் உண்மையான காரணம்.

நாம அப்படி இருந்து கருத்து கேட்க நினைக்கும் “அடுத்தவர்” யார்? உறவா, நட்பா, சொந்தமா, பந்தமா?..... அவர் எப்படிப் பட்டவர், அவரின் குணம் எப்படிப் பட்டது, இவற்றை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஒரு விஷயத்தை ஒருவர் அணுகும் விதம் மூலம், அவரோட எண்ணத்தை, குணத்தை பிரதிபலித்து காட்டி விடும். எல்லாவற்றையும் எல்லோரிடமும் கேட்கக்கூடாது.

நாம் செய்ய நினைக்கும் ஒரு விஷயம், நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும், அதை சிலர் போற்றுவர், சிலர் தூற்றுவர். அடுத்தவங்க சொல் கேட்டு நடக்கும் போது சில சமயம் வெற்றி கிடைக்கும். (அந்த அடுத்தவர் உண்மையிலேயே அவரின் மீது அன்பு, நேசம் கொண்டு சரியான ஆலோசனை தரும் போது). இல்லைனா நம் கதி அதோ கதி தான். எது எவ்வாறு இருந்தாலும், நம் விஷயத்தில், நாம் தான் முடிவு செய்ய வேண்டும். நம்முடைய எண்ணங்கள் செயல்களாக மாறுகின்றன. முறையான முயற்சியும், திடமான நம்பிக்கையும், ஆழமான திட்டமிடலும் தான் நம்ம முன்னோக்கி கொண்டு போகுது.

அவன் கேட்கிறான், இவன் சொல்கிறான், இப்படி செஞ்சா என்ன, அப்படி செஞ்சா என்னனு கேட்குறான்... இப்படிப்பட்டவர்கள் சொல்லை நாம் கேட்பதால் நமக்கு பயன் எதுவும் இல்ல. மாறாக நலவுக்கு பதிலாக கெடுதிதான் அதிகம் வர்ர வாய்ப்பிருக்கு. நாம செய்யும் நலவான காரியங்கள், சுப விஷயங்களில் இத்தகய “அடுத்தவர்களை” ஒடுக்கி, முறையான ஆலோசனை செய்து நாம் செய்யும் போது, எந்த காரியமும் தடையின்றி சுபமாக முடியும்.

Sunday, October 11, 2009

R A C பயணச் சீட்டு

கணினியின் திரையில் தன்னுடைய ரயில் பயணத்தின் முன்படிவு செய்யப்பட்ட டிச்கெட் ஐ பார்த்துக் கொண்டிருந்தான் ராம்.

அவனுடைய மனதில் சிறு வருத்தம். இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியில் அவன் படிவு செய்து இருந்தாலும், அவனுக்கு படுக்கை வசதி கிடைக்க வில்லை. மாறாக உட்கார்ந்து பயணம் செய்யும் வசதி தான் கிடைத்தது.

நாளை காலையில் அலுவலகம் செல்ல வேண்டும். வேறு வழியின்றி சிறு செய்தித்தாள் எடுத்து வைத்துக்கொண்டான். அதை தரையில் போட்டு விறிப்பு விரித்து தூங்கிக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்.

ரயில் வேகம் கொண்டு கிளம்பி விட்டது. தூக்கம் வராததால் தான் வைத்திருந்த புத்தகத்தில் மூழ்கி போனான்.

சிறிது நேரம் கழித்து டிச்கெட் பரிசோதகர் வந்தார்.

டிச்கெட் கொடுங்க, பரிசோதகர்.

சார்... , நீட்டினான் ராம்.

அவனுக்கான இருக்கை எண்ணை குறித்து கொடுத்து சென்று விட்டார்.

அப்போது அருகில் சுமார் 40 வயது பெண்மணி இருக்கை இல்லாமல் நின்று கொண்டு பயனிப்பதை கவனித்தான்.

நமக்கு தான் உட்கார வசதி இருக்கிறதே, பாவம் அந்த பெண்மணி என்று, தான் கொண்டு வந்த செய்தித்தாளை கொடுத்து அதை தரையில் விரித்து அமர்ந்து கொள்ளுமாறு சொன்னான் ராம்.

நன்றியோடு அவனிடம் பெற்றுக்கொண்டாள் அந்த பெண்மணி.

கண் மூடி உட்கார்ந்திருந்த சிறிது நேரத்தில், மீண்டும் வந்த டிச்கெட் பரிசோதகர் அவனுடய டிச்கெட் கேட்டு வாங்கி பார்த்தார்.

பரிசோதகரை கேள்வி குறியோடு பார்த்துக் கொண்டிருந்தான் ராம்.

”அடுத்த கோச்சில் ஒரு படுக்கை காலியாக உள்ளது. நீங்க அதை எடுத்து கொள்ளுமாறு சொல்லி விட்டு சென்று விட்டார்” டிச்கெட் பரிசோதகர்.

ராமின் அன்றைய பயணம் நல்ல படியாக துவங்கியது.

;;