Tuesday, April 20, 2010

வரி என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பு. வரிப்பணத்தை கொண்டே ஒரு நாடு, அதனுடைய வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துகின்றது. நாட்டின் சட்ட திட்டத்தின் படி, ஒவ்வொரு தனி நபரும், தான் சம்பாதிக்கும் வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும். இல்லையென்றால் குற்றம் இலைத்ததாகி விடும். அது போலவே வருமான வரிக்கணக்கை தணிக்கை (Tax Filing) செய்ய வேண்டும்.

பெரும் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு, அந்நிறுவனமே சம்பளத்தில் இருந்து வருமான வரியை ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்து கொள்ளும். இது யாவும் உள்நாட்டில் நாம் சம்பாதிக்கும் வருமானத்துக்கு உரியவைகள் ஆகும்.

அதுவே நாம் வெளி நாட்டில் வேலை செய்யும் போது, அந்தந்த நாட்டின் வருமான வரி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு நாட்டிலும் இச்சட்டம் மாறு பட்டதாக இருக்கும்.

ஆனால் வெளி நாட்டில் நாம் வருமான வரி கட்டி சம்பாதித்த பணத்தை நம் நாட்டிற்கு அனுப்பும் பொது, அதற்கென பிரத்யோக சட்டம் இருக்கிறது. அதை பின்பற்ற வேண்டும். இதற்காக இந்திய அரசு, தான் நட்பு பாராட்டும் நாடுகளில், சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன. அதாவது, எந்த நாட்டில் நமக்கு வருமானம் வருகிறதோ, அந்த நாட்டில் மட்டும் வருமான வரியை செலுத்தினால் போதும். அதே பணத்தை நாம் நமது ஊருக்கு அனுப்பும் போது, அதற்கென தனியாக வருமான வரி கட்ட தேவை இல்லை. இதற்காக, "இரட்டை வரி விடுப்பு சட்டம்" உள்ளது.

இச்சட்டத்தின் படி, குறிப்பிட்ட நாடுகளில் வேலை பார்ப்பவர்கள், தொழில் செய்பவர்கள், அங்கு ஈட்டும் வருமானத்துக்கு, உள்நாட்டில் வருமான வரி கட்டினால் போதும். மீண்டும் ஒரு முறை நமது சொந்த நாட்டில் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. அதை வங்கி மூலமாகவோ, அல்லது அனுமதிக்க பட்ட பிற முறைகளிலோ நாம் சொந்த ஊருக்கு அனுப்பி, எந்த வரியும் கட்டாமலே, வருமானத்தை தணிக்கை செய்து கொள்ளலாம்.

மேலும் விவரமான தகவல்களுக்கு, கீழே குறிப்பிட்டுள்ள இந்திய அரசின் வருமான வரித்துறையின் இணைய தளத்தில் காணலாம்.

http://www.incometaxindia.gov.in/publications/9_Income_Tax_For_NRI/Chapter012.asp

Friday, April 16, 2010

தமிழ் அகராதி

மொழிப்பற்று என்பது எல்லோருக்கும் இருக்கும் பொதுவான ஒன்று. இதில் விசேஷம் என்னவென்றால், தாய் மொழியின் அருமையும், பெருமையும், நாம வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ இருக்கும் பொது ரொம்ப அதிகமாகவே தெரியும். ஏன்னு சொன்னா அப்போ நம்ம தாய் மொழி பேச நம்ம கூட யாரும் இருக்க மாட்டாங்க அல்லது ரொம்ப குறைவா இருப்பாங்க. ஆனா நான் மலேசியா வந்ததில் இருந்து, எனக்கு ஒரு வெளிநாட்டில் இருக்கும் எண்ணமே வரல. அடுக்கு காரணம், எங்க பார்த்தாலும் தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் உணவகம் என அடுக்கிட்டே போலாம்.

ஆனா, ஜாப்-ல அப்படி இல்ல. பெரும்பாலானவங்க சீனா காரங்க தான். மேனேஜர், டீம் லீடர் இப்படி எல்லோருமே. எங்க போனாலும் தமிழ் பேசற மக்கள் கொஞ்சமாவது இருக்கறது உண்டு. அப்படி தான் எங்க ஆபீஸ்லும் என்ன மாதிரி இன்னும் இரண்டு சென்னை பசங்க இருக்காங்க. இடைவெளி நேரத்தில் வெளில போறது, லஞ்ச் சாப்ட போறது, போர் அடுச்சா ஒன்னு கூடி கத பேசுறது, இப்படி அடுக்கிட்டே போலாம்.

இதுல என்ன விசேஷம்னா, எங்க பக்கதுலயே மேலதிகாரிகள் (மேனேஜர்) இருப்பாங்கா.. அந்த சமயம் இங்கிலீஷ் ல பேச முடியாது. எப்போ தமிழ் பேசரமோ இல்லையோ, அப்போ தமிழில் தான் பேசி ஆகனும். அப்போது தான் அவங்களுக்கு புரியாது. இதுல முக்கியமான விஷயம் என்னனா, சுத்த தமிழ்ல பேசணும். ஆங்கிலம் கலந்து பேசக் கூடாது.

இதற்காகவே, நாங்கள் ஒவ்வொரு முக்கியமான விஷயத்துக்கும், அதற்கேற்ப தமிழ் வார்த்தை (அகராதி) வைத்துள்ளோம். உதாரணமாக, சில வார்த்தைகள் இங்கே குறிப்பிடுகிறேன்....

பழைய நகரம் வெல்ல காபி - Old Town White Coffee
நேர சதுரம் - Times Square
பக்கத்து ஊட்டு காரி - Next seat girl
சாப்பாடு நீதி மன்றம் - Food Court
பாவப்பட்ட ஊர் - "Sin"gapore
கொட்ட தண்ணி - Coffee
மருத்துவ சான்றிதழ் - MC (Medical Certificate)
முக்கிய சாவி - PrimaryKey
வெளிநாட்டு சாவி - Foreignkey
நாட்டாமை - Project Director
அடியாள் - Developers


இப்படி நெறைய அடிகிட்டே போலாம். எப்படி-லாம் நாங்க தமிழ் வளர்கறோம் பார்தீங்களா... :)

;;